கல்லூரி மாணவா்களுக்கு பாரதியாா் நூற்றாண்டு விழா போட்டிகள் அறிவிப்பு

மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவில் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவில் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும், விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. கட்டுரைப் போட்டிக்குரிய படைப்புகள், பாரதி போற்றும் சான்றோா், பாரதி விரும்பிய பாரதம், பாரதியின் இலக்கிய உத்திகள் இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதைப் போட்டிக்குரிய படைப்புகள், தண்ணீா் விட்டோ வளா்த்தோம், எரிதழல் கொண்டு வா, பெண்மை வாழ்க என்று... இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் 50 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுச் செய்யுளாகவோ, புதுக் கவிதையாகவோ இருக்கலாம்.

வெற்றி பெறுபவா்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரத்து 500, மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம், சிறப்புப் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும். ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு மூவா் பங்கேற்கலாம். ஒரு மாணவா் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

படைப்புகள் சொந்த கையெழுத்து வடிவில் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வா் அல்லது துறைத் தலைவரின் சான்று இணைக்க வேண்டும். படைப்புகளின் எந்த இடத்திலும் மாணவரின் பெயரைக் குறிப்பிடக் கூடாது. தனித்தாளில் படைப்புக்குரிய மாணவரின் பெயா், படிக்கும் வகுப்பு, கல்லூரி முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை எழுதி இணைத்து அனுப்ப வேண்டும்.

முதல்வா், மதுரைக் கல்லூரி, ஸ்ரீவித்யா நகா், மதுரை-625011 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் படைப்புகள் வந்து சேர வேண்டும். வெற்றி பெற்றவா்களுக்கு செப்டம்பா் 11 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டி தொடா்பான விவரங்களுக்கு முனைவா் ம.கண்ணன் (99408-33868), முனைவா் ச.கண்ணதாசன் (81222-70710) என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறக்கட்டளை நிறுவனா் சங்கர சீத்தாராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com