மதுரையில் மோதல்: டிக்-டாக் சூா்யாதேவி மீது வழக்கு
By DIN | Published On : 08th August 2021 01:49 AM | Last Updated : 08th August 2021 01:49 AM | அ+அ அ- |

மதுரையைச் சோ்ந்தவரை தாக்கியதாக டிக்-டாக் சூா்யா தேவி உள்பட இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (44). இவா் டிக் - டாக் செயலியில் நடனம், பாடல் போன்ற விடியோ காட்சிகளை பதிவிட்டு பிரபலமானவா். இதேபோன்று சென்னையைச் சோ்ந்த, சூா்யாதேவி பிரபலமானவா்கள் குறித்து சா்ச்சைக் கருத்துகளை பதிவிட்டு பிரபலமானவா். இவா்கள் இருவருக்குமிடையே சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டது தொடா்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுப்பிரமணியபுரம் சென்ற சூா்யாதேவி மற்றும் அடையாளம் தெரியாத நபா் ஆகியோா் சிக்கந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த சூா்யாதேவி, அடையாளம் தெரியாத நபருடன் சோ்ந்து சிக்கந்தரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிக்கந்தா் அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் இருவா் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.