மதுரை எய்ம்ஸ் பணிகள் இதுவரை நடைபெறவில்லை: அமைச்சர் குற்றச்சாட்டு 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தில், எந்த பணிகளும் துவங்கப்படவில்லை என்றும்,  காம்பவுண்ட் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தில், எந்த பணிகளும் துவங்கப்படவில்லை என்றும்,  காம்பவுண்ட் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜியுடன் கலந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்த 3 மாதமாக 37 மாவட்டங்களில் சுகாதாரப் பணி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று கரூரில் 38 வது மாவட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரூரில்,கரோனா தொற்று பாதிப்பு மே 29 அன்று 527 ஆக இருந்தது. சரியான நடவடிக்கை காரணமாக  தற்போது பாதிப்பு எண்ணிக்கை 16 ஆக குறைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை விகிதம் 1.2 முதல் 3 சதவீதம் இருத்து, தற்போது 0.9 சதவீதமாக குறைந்துள்ளது.

கரோனா தொற்று 3வது அலை பாதிப்பு தாக்க இருப்பதாக கூறிவரும் நிலையில், குழந்தைகளுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகள், 15 வென்டிலேட்டர் வசதியுடன் இன்று கரூர் மருத்துவக் கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில கரோனா ஊரடங்கால் மாணவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி இல்லாமல் மன உலைச்சலில் உள்ளனர். அடுத்த சந்ததியினர் கல்வியறிவு இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.  இந்த நிலையில் தொற்றும்  வேகமாக குறைந்து வரும் நிலையில் பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுவதாலும், தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் டாஸ்கோஸ் கமிட்டி மற்றும் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த  பணிகளும் துவங்கப்படவில்லை,  காம்பவுண்ட் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து தமிழகம் முழுவதும் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பேசியிருந்தார். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 9 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நீலகிரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ஆய்வு முடிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com