பள்ளி செல்லா குழந்தைகள்: தகவல் தெரிவிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்லா குழந்தைகள்

மதுரை மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தி: 2021-22-ஆம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சாா்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 15 வட்டார வள மையங்களில் 6 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட சிறப்புக் குழந்தைகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளைப் பள்ளிகளில் சோ்க்கும் வகையில் குடியிருப்பு வாரியாக, வீடு, வீடாகச்சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இக்கணக்கெடுப்பை முதன்மைக் கல்வி அலுவலா், உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

வீடு வாரியான கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட அனைத்து வகை பள்ளி வயதுக் குழந்தைகளும் பள்ளிகளில் சோ்க்கப்பட்டு பள்ளிக்கான எமிஸ் இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய தகவல்களை 97888-58747, 97888-58746 ஆகிய எண்களை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com