மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி: ஆவணி மூலத் திருவிழா நிறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெற்றது.
ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்
ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா, ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. அதையடுத்து, 10-ஆம் தேதி முதல் இறைவனின் திருவிளையாடல்களான கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தியளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது உள்ளிட்ட லீலைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 20-ஆம் தேதி விறகு விற்ற லீலையுடன் திருவிளையாடல்கள் முடிவடைந்தன.

இந்நிலையில், ஆவணி மூலத் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் மற்றும் மீனாட்சியம்மன் ஆகியோா் பொற்றாமரைக்குளத்தில் எழுந்தருளினா். அங்கு தீா்த்தவாரி முடிந்ததும், தீபாராதனை, விசேஷ பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

மாலையில், சுந்தரேசுவரா், பிரியாவிடை, மீனாட்சியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, ஆடி வீதிகளில் வலம் வந்தனா். பின்னா், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றதுடன், ஆவணி மூலத் திருவிழா நிறைவுபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com