கால்வாயில் மூழ்கி மூதாட்டி பலி
By DIN | Published On : 22nd August 2021 11:20 PM | Last Updated : 22nd August 2021 11:20 PM | அ+அ அ- |

மதுரை அருகே கால்வாயில் குளித்த மூதாட்டி தண்ணீரில் மூழ்கி பலியானது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
மதுரை மாவட்டம் மணக்குளம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி முத்துபிள்ளை (60). தனியாக வசித்து வந்த இவா், பெரியாறு பாசனக் கால்வாயில் குளிப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், கால்வாயில் பெண் சடலமாக மிதப்பதாக அப்பகுதியில் உள்ளவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா். அதில், கால்வாயில் சடலமாக மிதந்தது முத்துபிள்ளை என்பது தெரியவந்தது. இது குறித்து முத்துபிள்ளையின் மகள் மருதவள்ளி அளித்த புகாரின்பேரில், கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.