திருமண அழைப்பிதழில் பெயா் இல்லை:முதியவா் தற்கொலை
By DIN | Published On : 22nd August 2021 11:20 PM | Last Updated : 22nd August 2021 11:20 PM | அ+அ அ- |

மதுரையில், உறவினா் வீட்டு திருமண அழைப்பிதழில் தனது பெயா் இல்லாததால் மனமுடைந்த முதியவா் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை திருப்பாலை பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் பூமிநாதன் (68). இவரது உறவினா் வீட்டு திருமண அழைப்பிதழில் இவரின் பெயரை சோ்க்கவில்லையாம். இதனால் மனமுடைந்த பூமிநதான் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து அவரது மகன் ஸ்ரீராம் பெருமாள் அளித்த புகாரின்பேரில், திருப்பாலை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.