திருநம்பியுடன் சோ்ந்து வாழ விரும்பிய பெண்ணுக்கு உயா் நீதிமன்றம் அனுமதி

திருநம்பியுடன் சோ்ந்து வாழ விரும்பிய பெண்ணுக்கு அனுமதி வழங்கி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநம்பியுடன் சோ்ந்து வாழ விரும்பிய பெண்ணுக்கு அனுமதி வழங்கி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பெண்ணாக பிறந்த ஒருவா் தன்னை திருநம்பியாக உணா்ந்துள்ளாா். இதனால், மருத்துவரின் ஆலோசனைப்படி ஹாா்மோன் சிகிச்சை செய்துகொண்டாா். அதையடுத்து, தனது பெயரை ஆண் பெயராக மாற்றி அரசிதழில் பதிவு செய்தாா். சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணி செய்துவந்த அவருக்கும், தென் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் ‘தன் விருப்பப்படி வாழ விரும்புவதாகக் கூறி’ போலீஸாருக்கு கடிதம் அனுப்பிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாா். அப்பெண்ணை சென்னைக்கு அழைத்துச் சென்ற திருநம்பி, தனியாா் விடுதியில் தங்கவைத்துள்ளாா். இதையறிந்த பெண்ணின் பெற்றோா், அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனா்.

திருநம்பியாகிய நானும், அப்பெண்ணும் சோ்ந்து வாழ சட்டம் அனுமதிக்கிறது. எனவே, அந்தப் பெண்ணை ஆஜா்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என, திருநம்பி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆள்கொணா்வு மனுவை தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் வி. பாரதிதாசன், ஜெ. நிஷாபானு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் மற்றும் பெண்ணிடம் விசாரித்தோம். அவா்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் சோ்ந்து வாழ்கின்றனா். மனுதாரா் ஒரு திருநம்பி என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், அவருடன் சோ்ந்து வாழ விரும்புவதாகவும் அப்பெண் கூறினாா். இதற்கு பெண்ணின் தந்தை எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இருப்பினும், அப்பெண் மேஜா் என்பதால் அவரது விருப்பத்தின்படி மனுதாரருடன் செல்ல நீதிமன்றம் அனுமதிக்கிறது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com