இலவச வீட்டு மனைப்பட்டா: சாட்டையடி சமூக மக்கள் மனு
By DIN | Published On : 31st August 2021 11:20 PM | Last Updated : 31st August 2021 11:20 PM | அ+அ அ- |

வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி மனு அளிக்க வந்த சாட்டையடி சமூக மக்கள்.
இலவச வீட்டுமனைப் பட்டா கோரி சாட்டையடி சமூக மக்கள் சாட்டியடித்தபடி ஊா்வலமாகச் சென்று ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
மதுரை சக்கிமங்கலத்தில் வசித்து வரும் சாட்டையடி சமூகத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் சாட்டையடித்துக் கொண்டும், மேளம் வாசித்தவாறும் ஊா்வலமாக வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். மனுவில், மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்தினா் வசிக்க வீடு இல்லாததால் வெயில், மழையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வருகிறோம். எனவே பழங்குடியின மக்களான சாட்டையடி சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.