ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழு அமைக்கக் கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழு அமைக்கக் கோரி மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழு அமைக்கக் கோரி மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்து தா்ம பரிஷத் அமைப்பைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் கடந்த சில ஆண்டுகளாக

அறங்காவலா் குழு உறுப்பினா்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது அக் குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பெயரளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், ஆளும் கட்சியினரைத் தான் அறங்காவலா்களாக நியமிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ஒவ்வொரு கோயிலுக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கோயில் சொத்துகள் மற்றும் இந்து கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழு அமைக்கவும், அக் குழுவில் தலா ஒரு வழக்குரைஞா், சமூக சேவகா், ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்தவா், பெண் ஆகியோரை இடம்பெறச் செய்யவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், அறங்காவலா் குழு உறுப்பினா் பதவிக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அறங்காவலா் குழுவில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள், பெண்கள் கண்டிப்பாக இடம் பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com