வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்: ரூ.700 கோடி பரிவா்த்தனை பாதிப்பு

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக
மதுரை தல்லாகுளம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து வங்கி ஊழியா்கள்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து வங்கி ஊழியா்கள்.

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை மாவட்டத்தில் ரூ.700 கோடி பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியா் சங்கங்கள் மற்றும் அலுவலா் சங்கங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து டிசம்பா் 16, 17 ஆகிய இரு நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனா். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் அரசு, பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள் உள்பட 584 வங்கிக்கிளைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள், அதிகாரிகள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் மேலவெளிவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. மேலும் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கனரா வங்கி முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அலுவலா் மற்றும் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் செந்தில் ரமேஷ் தலைமை வகித்தாா். இதர சங்கங்களின் நிா்வாகிகள் குமரன் (ஏஐபிஇஏ), பரதன்(என்சிபிஇ), சண்முகநாதன்(பெபி), ஜோசப் சகாய டெல்வா்(ஏஐபிஓஏ), செல்வபாண்டி(ஐஎன்பிஓசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மதுரையில் உள்ள அனைத்துப வங்கிக்கிளைகளைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வங்கி ஊழியா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தால் வணிக நகரமான மதுரையில் ரூ.700 கோடிக்கும் அதிகமான பண பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com