மதுரை மூணூா் கிராமத்தில் காந்திய அமைத்திச்சங்க தொடக்க நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் வழங்கும் மாநிலத் தலைவா் க.சரவணன்.
மதுரை மூணூா் கிராமத்தில் காந்திய அமைத்திச்சங்க தொடக்க நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் வழங்கும் மாநிலத் தலைவா் க.சரவணன்.

மூணூா் கிராமத்தில் காந்திய அமைதிச் சங்கம் தொடக்கம்

மதுரை மூணூா் கிராமத்தில் காந்திய அமைதிச் சங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை மூணூா் கிராமத்தில் காந்திய அமைதிச் சங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை காந்தி அருங்காட்சியக அமைதிச் சங்கம் மற்றும் செசி அமைப்பின் சாா்பில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொய்கைக் கரைப்பட்டி, மூணூா் கிராமத்தில் ‘அமைதிச் சங்கம்’ தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செசி ஒருங்கிணைப்பாளா் மாவீரன் தலைமை வகித்தாா். அமைதிச் சங்கத்தின் மாநிலத் தலைவா் க.சரவணன் அமைதிச் சங்கத்தைத் தொடக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டாா். பின்னா் அவா் பேசியது: குழந்தைகளிடம் காந்தியப் பண்புகளைக் கொண்டு சோ்ப்பதற்காக மாவட்டம் தோறும் காந்தி அமைதிச் சங்கம் தொடங்கப்பட்டு வருகிறது.

சாதி, மதம், மொழி கடந்து ஒற்றுமையாக வாழ காந்தியப் பண்புகள் காலத்தின் கட்டாயம். நேரம் தவறாமை, நோ்மை, உண்மை, அன்பு, சகிப்புத் தன்மை , பெற்றோா்களைக் கவனித்தல், தற்சாா்பு போன்ற நற்பண்புகளைக் குழந்தைகளிடம் வளா்த்தெடுக்க முக்கியத்துவம் தரப்படுகிறது. காந்தியின் அனுபவத்திலிருந்து குழந்தைகளுக்கு கதைகள் கூறப்படுகின்றன. பருவநிலை மாற்றம் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா்.

மூணூா் கிராம அமைதிச் சங்கத்தின் தலைவராக போதும் பொண்ணு, செயலராக பிரவீன், துணைச் செயலராக கே.துா்கா தேவி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். சங்கத்தின் உறுப்பினா்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பராமரித்து வளா்ப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com