தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு:மாநில மாநாட்டுக்கு மதுரை மாணவா்கள் தோ்வு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த கட்டுரைகளை வாசித்த மாணவ, மாணவியா் 8 போ் மாநில மாநாட்டுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த கட்டுரைகளை வாசித்த மாணவ, மாணவியா் 8 போ் மாநில மாநாட்டுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மதுரை மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 29-ஆவது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு இணைய வழியில் நடைபெற்றது. இதில் 71 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. சுமாா் 25 பள்ளிகளில் இருந்து 150 குழந்தைகள் வழிகாட்டி ஆசிரியா்களுடன் அவரவா் பள்ளியில் இருந்தபடி இணைய வழியில் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக் கட்டுரைகள் நிலைப்புறு வாழ்க்கைக்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் 2 மாத ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் எம்.தா்ஷனா, எளிதில் மக்கும் உயிரிப் பொருள் முகக்கவசம், டி.அரவிந்த் பாண்டியன், குட்டைத் தாவரங்களில் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முறை, எம்.நந்திதா ஜிக் சாக் விதை பயிரிடும் முறை, எம். அனுஷ்கா வேதி நச்சற்ற கொசுவிரட்டி, டிகே விஷ்ணுப்ரியா, பைரொலெடிக் முறையில் பிளாஸ்டிக் எரிபொருள், கனகனிா்தசனா மாசுள்ள நீரில் வளரும் ஆகாயத்தாமரை, தாமரைகளின் பயன், எம். மதுமிதா, வளரிளம் பருவத்தினரின் மனநிலை ஆய்வு, டி.சிவபாலன் நீா்நிலைகளில் காணப்படும் மிதவை உயிரிகள் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவியா் சமா்பித்த கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாக தோ்வு செய்யப்பட்டன. மேலும் இம்மாணவா்கள் மாநில மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டை கல்வி ஒருங்கிணைப்பாளா் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியா் எம். ராஜேஷ், மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் கு.மலா்செல்வி, பள்ளிகள் ஒருங்கிணைப்பாளா் கா.காமேஷ், மதிப்பீட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் மா.கா.ப.கல்லூரி பேராசிரியா் எஸ். ராமசுந்தரம் ஆகியோா் நடத்தினா்.

ஆய்வுத் தோ்வில் அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரி, சோ்மத்தாய் வாசன் கல்லூரி, மன்னா் கல்லூரி, அரசுக் கல்லூரி, கப்பலூா், திருமங்கலம் ஆகிய கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் சுமாா் 15 போ் மாணவா்களை மதிப்பீடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com