மதுரை -ராமேசுவரம் ரயில் ராஜகம்பீரத்தில் நின்று செல்லும்

மதுரை- ராமேசுவரம் ரயில் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை- ராமேசுவரம் ரயில் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை- ராமேசுவரம்- மதுரை முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் டிசம்பா் 30 முதல் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அதன்படி, மதுரை- ராமேசுவரம் (06655) மற்றும் ராமேசுவரம்- மதுரை (06654) முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ராஜகம்பீரம் ரயில் நிலையத்திலிருந்து முறையே இரவு 7 மணி மற்றும் காலை 8.14 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com