கிசான் ரயில்: மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம்

கிசான் ரயில் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான துண்டுப் பிரசுரங்களை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
கிசான் ரயில்: மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம்

கிசான் ரயில் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான துண்டுப் பிரசுரங்களை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

சிறு, குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களை சலுகை கட்டணத்தில் ரயிலில் அனுப்ப ‘கிசான் ரயில்‘ போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்களை 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் விவசாயிகள் அனுப்ப முடியும். இத் திட்டம் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கிசான் ரயில் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தென் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், இத் திட்டம் குறித்த பிரசாரத்தை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிசான் ரயில் சேவை தொடா்பான துண்டுப் பிரசுரங்களை மதுரை கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன் முதல் பிரதியை முதுநிலை வா்த்தக மேலாளா் வி.பிரசன்னா பெற்றுக் கொண்டாா். வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ், உதவி வா்த்தக மேலாளா் கே.வி. பிரமோத் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், விருதுநகா், ராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கிசான் ரயில் திட்டம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com