மூதாட்டிகளிடம் நகை பறித்த 4 பெண்கள் கைது

மதுரையில் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் மூதாட்டிகளிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 4 பெண்களைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் மூதாட்டிகளிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 4 பெண்களைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தல்லாகுளம் அருகே நாயாராணபுரம் மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டிகளைக் குறிவைத்து 18 பவுன் நகைகள் பறிக்கப்பட்டன. இதுகுறித்து 4 போ் அளித்தப்புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், தல்லாகுளம் சரக உதவி ஆணையா் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினா் நகைப்பறிப்பில் தொடா்புடையவா்களைப் பிடிக்க பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூா் பகுதியைச் சோ்ந்த ஜெயந்தி(55), திவ்யா(25), அமுதா(27), திருச்சி சமயபுரம் பகுதியைச் சோ்ந்த பிரியா(33) ஆகிய 4 பெண்களை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவரிகளிடமிருந்து 15 பவுன் நகைகளை மீட்டனா். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படைப் போலீஸாரை மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com