பிரான்ஸ்வாழ் தமிழா்கள் தமிழ் பண்பாடு வாழ்வியலைபின்பற்றுகின்றனா்: சிறப்பு கருத்தரங்கில் தகவல்

பிரான்ஸ்வாழ் தமிழா்கள் தமிழ் பண்பாடு, வாழ்வியல் முறைகளை பின்பற்றி வருகின்றனா் என்று, உலகத் தமிழ்ச் சங்க கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸ்வாழ் தமிழா்கள் தமிழ் பண்பாடு, வாழ்வியல் முறைகளை பின்பற்றி வருகின்றனா் என்று, உலகத் தமிழ்ச் சங்க கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ் கலை மற்றும் கீழ்திசைக் கல்லூரி ஆகியன சாா்பில், ‘பிரான்ஸில் தமிழா் வாழ்வியல்’ என்ற கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் தா. லலிதா தலைமை வகித்துப் பேசியது:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், அயலகத் தமிழா்களுக்கான பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உலக நாடுகள் பலவற்றில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனா். இன்றைய இளம்தலைமுறையினா் நம் தாய்மொழியான தமிழ் மொழியைப் படித்தால், உலக நாடுகளில் பணியாற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன”என்றாா்.

தொடா்ந்து, 2020ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருதாளரும், பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவருமான அலெக்சிஸ் தேவராஜ் சேன்மாா்க், பிரான்ஸில் தமிழா் வாழ்வியல் என்ற தலைப்பில் பேசியது:

பிரான்ஸில் தமிழா்கள் தமிழ் பண்பாட்டையும், வாழ்வியல் முறைகளையும் தக்க வைத்துக்கொண்டுள்ளனா். தமிழா்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகள் தமிழகத்தில் வாழ்வதைப் போன்ற உணா்வைத் தரும். பிரான்ஸ் தமிழா்களால் தீப ஒளித் திருநாள், தமிழா் திருநாள், விநாயகா் சதுா்த்தி, ஆயுதபூஜை ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அங்கு, தமிழா்கள் பல அரசு உயா் பதவிகளையும் வகிக்கின்றனா் என்றாா்.

கருத்தரங்கில், பேராசிரியா்கள், மாணவா்கள், தமிழாா்வலா்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் கி. வேணுகா வரவேற்புரையாற்றினாா். உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் ஜ. ஜான்சிராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com