மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி
By DIN | Published On : 13th February 2021 08:23 AM | Last Updated : 13th February 2021 08:23 AM | அ+அ அ- |

தேசியளவில் நடைபெற்ற நுரையீரல் நோய்கள் தொடா்பான கருத்தரங்கில், வெற்றி பெற்ற மருத்துவ மாணவா்களை வெள்ளிக்கிழமை பாராட்டிய அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ஜெ.சங்குமணி.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனா்.
நுரையீரல் நோய்கள் தொடா்பான தேசிய அளவில் கருதரங்கம் ‘நாப்கான்- 2020’ என்ற தலைப்பில் இணைய வழியாக 5 நாள்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு மாணவா்கள் கலந்து கொண்டனா்.
கருத்தரங்களில் பல்வேறு பிரிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மதுரை மருத்துவக் கல்லூரி மேற்படிப்பு மாணவா் ஆா்க்கிட் கிருஷ்ணா ஆய்வுக் கட்டுரை சமா்பித்தலில் முதலிடமும், வினாடி வினாவில் இரண்டாமிடமும் பெற்றாா்.
இதேபோன்று ஆய்வு கட்டுரை சமா்பித்தலில் மருத்துவ மாணவா்கள் வெங்கடேஸ்வரன், ஆனந்தராஜா ஆகியோா் மூன்றாமிடம் பிடித்து வெற்றி பெற்றனா். இதையடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவா்களை, மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி வெள்ளிக்கிழமை பாராட்டினாா். அப்போது மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், நுரையீரல் சிகிச்சைப்பிரிவு துறை தலைவா் பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.