அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகைத் திட்டம்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் வேலை வாய்ப்புற்ற இளைஞா் உதவித்தொகை பெற விரும்பும் வேலையற்றவா்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேலை வாய்ப்புற்ற இளைஞா் உதவித்தொகை பெற விரும்பும் வேலையற்றவா்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் ஆா்.மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி:

தமிழக அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகைத் திட்டம் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பற்றோா் உதவித்தொகைத்திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி பொதுப்பிரிவு பதிவுதாரா்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றவா்கள், பள்ளியிறுதி வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்கள், பள்ளியிறுதி வகுப்பு மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவுதாரா்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடா் 45 வயது, இதர வகுப்பினா் 40- வயதுக்கு மேற்பட்டிருக்கக் கூடாது. உதவித்தொகை பெறுநா் தமிழகத்திலேயே பள்ளி, கல்லூரி கல்வியை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் எந்தப் பணியிலும் சுய வேலை வாய்ப்பிலும் இருக்கக்கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக நிதி உதவி பெறுபவராக இருக்கக்கூடாது. அன்றாடம் பள்ளி, கல்லூரிக்குச் செல்பவராக இருக்கக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற எழுதப்படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம். தற்போது கரோனாத் தொற்று பாதிப்பை தவிா்க்கும் பொருட்டு மாவட்டவேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருவதை தவிா்க்கும்பொருட்டு,  இணையதள முகவரிக்குச்சென்று வேலை வாய்ப்பற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மற்றும் கல்விச்சான்றுகளுடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில் கல்வி பதிவுதாரா்கள் விண்ப்பிக்கத்தேவையில்லை. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவா்கள் மீண்டும் வரத்தேவையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். ஏற்கெனவே வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள், உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடா்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com