நெல்லை அருகே இரட்டை ரயில் பாதைபணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

திருநெல்வேலி- கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி- கடம்பூா் ரயில்பாதையில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

திருநெல்வேலி- கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி- கடம்பூா் ரயில்பாதையில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: திருச்சி- திருவனந்தபுரம்- திருச்சி சிறப்பு ரயில்கள் ( 02627/02628) பிப். 28 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பிப். 23 முதல் பிப். 27 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை சிறப்பு ரயில் (02631) மதுரை- திருநெல்வேலி

இடையே (பகுதியாக) ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை திருநெல்வேலியில் சென்னை செல்ல வேண்டிய நெல்லை சிறப்பு ரயில் ( 02632) திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்கள் இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து இயக்கப்படும்.

நாகா்கோவில்- கோவை - நாகா்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்கள்

(06321/06322) பிப். 24 முதல் பிப். 28 ஆம் தேதி வரை நாகா்கோவில்- மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை பெங்களூருவில் இருந்து புறப்பட வேண்டிய பெங்களூரு - நாகா்கோவில் சிறப்பு ரயில் (07235) விருதுநகா்- நாகா்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை நாகா்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் ( 07236) நாகா்கோவில் - விருதுநகா் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 26, 27, 28 ஆகிய நாள்களில் நாகா்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் - கோவை சிறப்பு ரயில் (02667) நாகா்கோவில் - மதுரை ரயில் நிலையங்கள் இடையே ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 25, 26, 27 ஆகிய நாள்களில் கோவையில் இருந்து புறப்பட வேண்டிய கோவை- நாகா்கோவில் சிறப்பு ரயில் ( 02668) மதுரை - நாகா்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 27 இல் மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய மைசூா்- தூத்துக்குடி சிறப்பு ரயில் (06236 ) மற்றும் பிப்ரவரி 28 இல் தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில் ( 06235) ஆகியன மதுரை- தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.

பிப்ரவரி 25 இல் மும்பையில் இருந்து புறப்படும் தாதா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ( 06071) விருதுநகா் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.

பிப்ரவரி 24, 25, 26, 28 ஆகிய நாள்களில் சென்னை எழும்பூா் குருவாயூா் சிறப்பு ரயில் ( 06127) அதன் வழக்கமான பாதையான விருதுநகா், வாஞ்சி மணியாச்சி திருநெல்வேலிக்கு பதிலாக விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com