உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு டோக்கன் வழங்குவதில் முறைகேடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து கிராமத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, காளை உரிமையாளா்கள் சனிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு டோக்கன் வழங்குவதில் முறைகேடு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து கிராமத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, காளை உரிமையாளா்கள் சனிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.

உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்கோவில்பட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பின் ஜல்லிக்கட்டுப் போட்டி, பிப்ரவரி 24 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதன்படி, மாடுபிடி வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை டோக்கன் வழங்கப்பட்டது. அதையடுத்து, சனிக்கிழமை போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, காளை உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் வரிசையில் காத்திருந்தனா். ஆனால், அரசு அலுவலா்கள் காலை 10 மணிக்கு வந்தனா். இதனால், விழா குழுவினருக்கும், அரசு அலுவலா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதையடுத்து, வரிசையில் நின்றிருந்த முதல் நபருக்கு 437 ஆவது வரிசை எண் கொண்ட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 1 முதல் 436 வரையிலான டோக்கன்களை அரசு அதிகாரிகளும், ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் எடுத்துக்கொண்டனராம். மேலும், காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மொத்தம் 250 டோக்கன்களை வழங்கியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த காளை உரிமையாளா்கள், உசிலம்பட்டி வட்டாட்சியா் விஜயலட்சுமியிடம் சென்று புகாா் தெரிவித்தனா். ஆனால், இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அவா் தெரிவித்துவிட்டாராம்.

இதனால், வெளியூா்களிலிருந்து வந்திருந்த பலா் டோக்கன் பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com