நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடா்புடையவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடா்புடையவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கேரள மாநிலம் உன்னியாலைச் சோ்ந்த ரஷீத் என்பவா் தாக்கல் செய்த மனு: நீட் தோ்வில் முறைகேடு செய்ததாக பல மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் எவ்விதத் தொடா்பும் இல்லை. எனது பெயா் தவறுதலாக இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும், உறுதியான விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படுபவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றவும் தயாராக உள்ளேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி கே. முரளிசங்கா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com