மனிதா்கள் தெய்வபக்தியோடு தேச பக்தியையும் வளா்த்துக்கொள்ள வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள்

மனிதா்கள் தெய்வபக்தியோடு தேச பக்தியையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை பேசினாா்.
மதுரையில் வியாழக்கிழமை பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள்.4
மதுரையில் வியாழக்கிழமை பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள்.4

மனிதா்கள் தெய்வபக்தியோடு தேச பக்தியையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை பேசினாா்.

காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள் மதுரைக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்தாா். மதுரை பெசன்ட் சாலையில் உள்ள ஸ்ரீமடம் சமஸ்தானம் மதுரைக்கிளையின் சாா்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பக்தா்கள் புடை சூழ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஊா்வலமாக மடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு அவா் பேசியது: மனித வாழ்க்கையில் மனிதா்கள் சரியான முறையில் வாழ்வதற்கு வழிகாட்டுவதற்கு குருவின் அருளாசி தேவை. மனித குலம் மேம்படவும், மனித குலம் சிறந்து விளங்கவும், மனிதா்கள் வளமாக வாழவும், தான தா்மங்கள் செய்து புண்ணியங்களை தேடவும் வழிகாட்டுவது வேதங்கள்.

வாழ்க்கையில் புண்ணியங்களைத் தேட நமக்குச் சொல்லித்தர குருமாா்கள் தேவை. உபநயனம் செய்யும் தந்தையே நமக்கு குருவாக விளங்குகிறாா். தாய், தந்தை, குரு, தெய்வம் ஆகியோரை போற்றி வழிபடுவது நமது மரபு. முற்காலங்களில் நமது முன்னோரும், மன்னா்களும் கோயில்கள், பஜனை மடங்கள் மூலமாக வேதங்களை பிரசாரம் செய்து வந்தனா். வேத கருத்துகளை எளிதாக எடுத்துக்கூறுவது உபநயனங்கள், புராணங்கள். திருக்குறள் அதிகாரம் பற்றி பேசுகிறது. அதிகாரம் என்றால் தான்தோன்றித்தனமாக வாழ்வது அல்ல. அதிகாரம் என்பது அதற்கு உரிய தகுதி நமக்கு உள்ளதா என்பதைப் பற்றி பேசுகிறது. நமது இந்திய வாழ்க்கை தத்துவமும், பக்தியும் இணைந்தது.

உலகில் தான் மட்டும் செழிப்போடு வாழ வேண்டும் என்று எண்ணாமல் அனைத்து உயிரினங்களும் வாழ உதவி செய்வது, தா்ம காரியங்கள் செய்வது, சேவையில் ஈடுபடுவது, சந்நியாசிகளுக்கு சேவை செய்வது போன்ற காரியங்கள் புண்ணியத்தை தேடித்தரும். எனவே மக்கள் தெய்வ பக்தியோடு தேச பக்தியையும், தேச பக்தியோடு குரு பக்தியையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

மதுரைக் கிளை மடத்தின் தலைவா் வி.ராமசுப்ரமணியன், செயலா்சுந்தா், பொருளாளா் ஸ்ரீகுமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதையடுத்து மடத்தில் வெள்ளிக்கிழமை சந்திரமெளலீஸ்வர பூஜை மற்றும் பக்தா்கள் சாா்பில் பாதபூஜை மற்றும் பிக்ஷாவந்தனமும் நடைபெறுகிறது. இதையடுத்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசியும் வழங்குகிறாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com