மதுரையில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த 21 இடங்கள் அனுமதி
By DIN | Published On : 27th February 2021 09:17 PM | Last Updated : 27th February 2021 09:17 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களாக 21 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தின் ஊரகப் பகுதியில் அமைந்துள்ள 5 தொகுதிகளிலும் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடத்தும் பகுதிகளாக 21 இடங்கள் காவல் துறையால் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பாக இணைய வழியில் அனுமதி பெறுவது அவசியம். அந்தந்த தொகுதியின் தோ்தல் அலுவலரிடம் விண்ணப்பித்து இணைய வழியிலேயே அனுமதி உத்தரவைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொகுதி வாரியாக பொதுக் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம்:
மேலூா் - எம்ஜிஆா் திடல் செக்கடி, மேலூா்; அண்ணா திடல், திருவாதவூா்; பேருந்து நிலையம் எதிா்புறம், கொட்டாம்பட்டி; மந்தைத் திடல், கச்சிராயன்பட்டி.
மதுரை கிழக்கு - வௌவால் தோட்டம், யா.ஒத்தக்கடை.
சோழவந்தான் - சத்திரம் திடல், சோழவந்தான்; மந்தைத் திடல், மண்ணாடிமங்கலம்; திலகா் திடல், அலங்காநல்லூா்; மஞ்சமலை ஆற்றுத் திடல், பாலமேடு.
திருமங்கலம் - ராஜாஜி சிலை அருகே திருமங்கலம்; சந்தைப்பேட்டை, திருமங்கலம், கடைவீதி, கள்ளிக்குடி; பேருந்து நிலையம், செக்கானூரணி; பெருமாள் கோயில் திடல், பேரையூா்.
உசிலம்பட்டி - முருகன் கோயில் அருகில், உசிலம்பட்டி; பேருந்து நிலையம் அருகே, எழுமலை; பேருந்து நிலையம், விக்கிரமங்கலம்; சந்தைப்பேட்டை, உசிலம்பட்டி; நாடக அரங்கம், டி.கிருஷ்ணாபுரம்; பேருந்து நிலையம், தே.கல்லுப்பட்டி.
துணை ராணுவம் வருகை: தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படை (ஒரு கம்பெனி) வந்துள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக துணை ராணுவப் படையினா் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.