மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்
By DIN | Published On : 27th February 2021 09:13 PM | Last Updated : 27th February 2021 09:13 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மேலூா், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி என 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மொத்தம் 3,856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்தல் நாளன்று பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மேலூா், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரி, சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி தொகுதிகளுக்கு நாகமலை புதுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு தொகுதிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.