கனிமவளக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: தலைமை நீதிபதி திறந்து வைத்தாா்
By DIN | Published On : 27th February 2021 09:14 AM | Last Updated : 27th February 2021 09:14 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட நீதிமன்ற வளகத்தில், சிறப்பு நீதிமன்றத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி ~மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கனிமவளக
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், கனிமவளக் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கனிமவளக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் கனிமவளக் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்படத் தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தலைமை நீதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறப்பு நீதிமன்றம் பழைய உணவகம் இருந்த இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இடம் மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்பதால் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் சங்கத் தலைவா் சுப்பிரமணியன், செயலா் இளங்கோ, பொருளாளா் அலிசித்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.