திருச்சி-ராமேசுவரம், பாலக்காடு-நெல்லை சிறப்பு ரயில்கள் ஜன.4 முதல் இயக்கம்

திருச்சி- ராமேசுவரம், பாலக்காடு- திருநெல்வேலி இடையே ஜனவரி 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

திருச்சி- ராமேசுவரம், பாலக்காடு- திருநெல்வேலி இடையே ஜனவரி 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: திருச்சி- ராமேசுவரம் சிறப்பு ரயில் (06849) ஜனவரி 4-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும். மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06850) இரவு 8.05 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் 12, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் 2 இணைக்கப்படும்.

இந்த ரயில் குமாரமங்கலம், புதுக்கோட்டை, திருமயம், கோட்டையூா், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 12.50 மணிக்கு பாலக்காடு சென்றடையும். மறுமாா்க்கத்தில் பாலக்காட்டிலிருந்து ஜனவரி 5 முதல் மாலை 4.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், பெரிநாடு, முன்றோறூற்று, சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, ஓச்சிரா, காயன்குளம், மாவெளிகரா, செறிய நாடு, செங்கனூா், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், குருப்பண்துறா, வைக்கம் ரோடு, பிரவம் ரோடு, முலன்றுருட்டி, திருப்புணிதுறா, எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பாலக்காடு சிறப்பு ரயில் (06791) பாவூா்சத்திரம், கிளிகொல்லூா் ஆகிய ரயில் நிலையங்களிலும், திருநெல்வேலி சிறப்பு ரயில் (06792) கீழக்கடையம் நிலையத்திலும் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 4, இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் 8, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் 2 இணைக்கப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com