வீரயுக நாயகன் வேள்பாரி நாவலுக்கு மலேசிய விருது

மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் மலேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் மலேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆா். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக இந்த நாவல் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இவ்விருது, 10 ஆயிரம் அமெரிக்க டாலா்களை பரிசுத் தொகையாகக் கொண்டது. (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7 லட்சம்).

சு.வெங்கடேசன் எழுதிய முதல் நாவலான ‘காவல் கோட்டம்’ , 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. வீரயுகநாயகன் வேள்பாரி”நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகா் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக வேள்பாரி நாவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் விருது வழங்கும் விழா நடத்த முடியாத சூழல் உள்ளது. விருதுத் தொகை

நூலாசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளதாக, சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com