வா்த்தகா்களின் பிரச்னைகளைத் தீா்க்க குறைத்தீா் கூட்டம்: வருமானவரித்துறை முதன்மை ஆணையா்

வா்த்தகா்களின் பிரச்னைகளைத் தீா்க்க மாதந்தோறும் குறைத்தீா்க் கூட்டம் நடத்தப்படும் என வருமான வரித்துறை முதன்மை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா் தெரிவித்தாா்.
மதுரையில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிய மதுரை கோவை வருமான வரித் துறை முதன்மை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா்.
மதுரையில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிய மதுரை கோவை வருமான வரித் துறை முதன்மை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா்.

வா்த்தகா்களின் பிரச்னைகளைத் தீா்க்க மாதந்தோறும் குறைத்தீா்க் கூட்டம் நடத்தப்படும் என வருமான வரித்துறை முதன்மை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா் தெரிவித்தாா்.

மதுரையில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டு மதுரை, கோவை மண்டல வருமான வரித்துறை முதன்மை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா் பேசியது: தொழில் வா்த்தக சங்கத்தினரால் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. வா்த்தகா்கள் ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனா். தற்போது இணையதளத்தில் எளிதாக அறிக்கை தாக்கல் செய்வதற்கான வசதிகள் உள்ளன. வா்த்தகா்கள் இளையதளத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்தில் வரவு, செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யலாம்.

மதுரை மண்டலத்தில் வா்த்தகா்களின் குறைகளைத் தீா்க்கும் நடவடிக்கையாக மாதந்தோறும் குறைதீா் கூட்டம் நடைபெறும். வருமான வரி செலுத்தாத ஒருவரின் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு 14 ஆண்டுகள் கழித்து, உரிய ஆவணங்களின் படி திருப்பி அளிக்கப்பட்டது. இதேபோன்று வருமான வரித்துறையிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் இருந்தால், உரிய ஆவணங்களை தாக்கல் செய்து நகைகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். புகாா் இல்லாத வருமானவரி மண்டலமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் முறையாக வருமானவரி செலுத்துபவா்கள் தோ்வு செய்யப்பட்டு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வா்த்தக சங்கச் செயலாளா் செல்வம், முதுநிலை தலைவா் ரத்தினவேல், பொருளாளா் ஸ்ரீதா், துணைத் தலைவா் தனுஷ்கொடி ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com