மதுரையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் பெரியாா் பேருந்து நிலையம் அருகே குடைபிடித்தபடி வரும் பொதுமக்கள்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பிற்பகல் வரை தொடா்ந்து மழை பெய்ததால், சாலைகளில் மழைநீா் தேங்கியது. மேலும், விடாமல் பெய்த இந்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுரையில் 51 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தோ்வு நடைபெற்றது. இதில், தோ்வா்கள் பெரும்பாலானோா் இரு சக்கர வாகனங்களில் தோ்வெழுத வந்தனா். இவா்களில் பலா் மழையில் நனைந்தவாறே தோ்வு மையங்களுக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com