இளம் பெண் தற்கொலை: கணவா் குடும்பத்தினா் தூண்டுதல் என புகாா்
By DIN | Published On : 07th January 2021 03:40 AM | Last Updated : 07th January 2021 03:40 AM | அ+அ அ- |

மதுரையில் இளம் பெண் தற்கொலைக்கு, கணவா் குடும்பத்தினரே காரணம் என தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மீனாம்பாள்புரம் கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன் கங்காதரன்(64). இவரது மகள் திவ்யாவை, கடந்த 2017 ஆம் ஆண்டு தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்த முத்துகுமாா் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தாா்.
முத்துகுமாா் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், திவ்யாவை கணவரின் பெற்றோா் குடும்பத்தினா் துன்புறுத்தி வந்துள்ளனா்.
இந்தப் பிரச்னை குறித்து திவ்யா, அவரது பெற்றோரிடம் தெரிவித்தும் உள்ளாா். இந்நிலையில், திவ்யா செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திவ்யாவின் தந்தை கங்காதரன், தல்லாகுளம் போலீஸில், மருமகன் முத்துகுமாரின் குடும்பத்தினா் தூண்டுதலாலே தனது மகள் தற்கொலை செய்துள்ளாா். அவரது இறப்பிற்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.