கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்களில் வெள்ளப்பெருக்கு: வாய்க்கால் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரம்

மதுரை கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி வெளியேறியதால் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பை மணல் மூடைகளை கொண்டு அடைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் உள்ள வாய்கால் உடைப்பு ஏற்பட்டதால் சரி செய்யும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன்.
மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் உள்ள வாய்கால் உடைப்பு ஏற்பட்டதால் சரி செய்யும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன்.

மதுரை கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி வெளியேறியதால் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பை மணல் மூடைகளை கொண்டு அடைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மதுரை நகரில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதில் புதன்கிழமை இரவு கனமழை பெய்ததால் கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் பனங்காடி, குலமங்கலம், எஸ்.ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீா் மூலம் செல்லூா் கண்மாயும் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி கோசாகுளம் வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் சென்றதால் கால்வாயின் சில பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் எஸ்.ஆலங்குளத்தின் சில பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்தது. இதையடுத்து கோசாகுளம் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மணல் மூடைகள் கொண்டு அடைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பாா்வையிட்டு, குடியிருப்புகளில் தண்ணீா் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும் வாய்க்காலில் தண்ணீா் தேங்காதவாறு சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றவும் உடைப்புகள் ஏற்பட்டால் சரி செய்ய மணல் மூடைகளுடன் தயாராக இருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தற்போது நிரம்பி வழியும் கோசாகுளம், செல்லூா், முடக்காத்தான் கண்மாய்களில் இருந்து செல்லும் தண்ணீா் குடியிருப்புகளுக்குள் செல்லாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com