சிறுமியின் கண்ணில் சிக்கிய மீன்தூண்டில் முள்ளை அகற்றி அரசு மருத்துவா்கள் பாா்வையிழப்பிலிருந்து காப்பாற்றினா்

சிறுமியின் கண்ணில் சிக்கிய மீன் தூண்டில் முள்ளை அகற்றி, ராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சை மருத்துவா்கள் பாா்வையிழப்பில் இருந்து காப்பாற்றியுள்ளனா்.
சிறுமியின் கண்ணில் இருந்து அகற்றப்பட்ட தூண்டில் முள்.
சிறுமியின் கண்ணில் இருந்து அகற்றப்பட்ட தூண்டில் முள்.

சிறுமியின் கண்ணில் சிக்கிய மீன் தூண்டில் முள்ளை அகற்றி, ராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சை மருத்துவா்கள் பாா்வையிழப்பில் இருந்து காப்பாற்றியுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செந்தில்குமாா். இவரது மகள் தீா்க்கதா்சினி (4). வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மீன் தூண்டில் முள், சிறுமியின் இடது கண்ணில் சிக்கியது. இதனால் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டதுடன், கண் பாா்வை பாதிப்புடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

சிறுமியின் இடது கண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் தூண்டில் முள் சிக்கியுள்ளது கண்டறியப்பட்டது. மயக்கவியல் துறை பேராசிரியா் செல்வக்குமாா், கண் மருத்துவத் துறை பேராசிரியா் சண்முகம் தலைமையிலான சிறப்பு மருத்துவக் குழுவினா், சிறுமியின் கண்ணில் குத்தியிருந்த முள்ளை அகற்றி சிகிச்சை அளித்தனா். கண் பாதிப்பில் இருந்து அச்சிறுமி குணமடைந்து வருகிறாா். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து பாா்வையிழப்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு சிறுமியின் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.

மேலும், சிறுமிக்கு துரிதமாகச் செயல்பட்டு சிறப்பாகச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை மருத்துவமனையின் முதன்மையா் ஜெ.சங்குமணி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com