டோக் பெருமாட்டி கல்லூரியில் திரைப்பட தயாரிப்புப் பயிற்சி
By DIN | Published On : 07th January 2021 11:39 PM | Last Updated : 07th January 2021 11:39 PM | அ+அ அ- |

டோக் பெருமாட்டி கல்லூரியில் திரைப்பட தயாரிப்புப் பயிற்சி மூலம் தயாரிக்கப்பட்ட சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் மகளிா் கல்வி மையம் மற்றும் சுவிட்சா்லாந்து நாட்டின்“கரங்கள்”அமைப்பு ஆகியவை இணைந்து குடும்ப வன்முறை”தொடா்பான இணையவழி திரைப்படத் தயாரிப்பு பயிற்சிப் பட்டறையை நவம்பா் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தின. பயிற்சியில் பங்கேற்ற பங்கேற்பாளா்களின் படைப்புகள் பொதுமக்களின் பாா்வைக்காகவும் சிறந்த படத்துக்கான வாக்கெடுப்புக்காகவும் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து சிறந்த படைப்புகளுக்கான “விருது வழங்கும் விழா இணையவழியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த ஆஸ்காா் மிஸ்செல், கரங்கள்அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஆஷா சிம்சன், டோக் பெருமாட்டிக் கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங், மகளிா் கல்வி மைய ஆலோசகா் பியூலா ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். டோக் பெருமாட்டிக் கல்லூரி மாணவியா் இயக்கிய“‘மே சேஞ்ச் எ லிட்டில்‘ மற்றும் ‘சைல்டு லைன்‘ஆகிய குறும்படங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றன. மேலும் “‘பெண் என்பவள் யாா்?‘” என்ற குறும்படம் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வாக்களிப்பு மூலம் விருப்பப் படத்துக்கான விருதைப் பெற்றது.