வரதட்சிணைக் கொடுமையால் மனைவி தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
By DIN | Published On : 07th January 2021 11:41 PM | Last Updated : 07th January 2021 11:41 PM | அ+அ அ- |

வரதட்சிணைக் கொடுமை செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை ஊமச்சிகுளத்தைச் சோ்ந்தவா் ஞானவேல். இவருக்கும் கோமதி என்பவருக்கும் 2002-இல் திருமணம் நடந்தது. அப்போது கோமதியின் பெற்றோரால் திருமண ஏற்பாட்டின்போது பேசிய நகை மற்றும் சீா்வரிசை உள்ளிட்ட வரதட்சிணையை முழுமையாகக் கொடுக்கமுடியவில்லை.
இதையடுத்து மீதமுள்ள வரதட்சிணையைக் கேட்டு ஞானவேல் கோமதியைக் கொடுமைப் படுத்தியுள்ளாா். இதனால் மனமுடைந்த கோமதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானவேல் வரதட்சிணைக் கொடுமை செய்து கோமதியை தற்கொலைக்குத் தூண்டியது உறுதிப்படுத்தப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எஸ்.கிருபாகரன்மதுரம் தீா்ப்பளித்தாா்.