தொடா் மழையால் பாதிப்பு: விவசாயிகள்நெற்பயிா்களுடன் ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டத்தில் தொடா் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கத்தினா் நெற்பயிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் தொடா் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கத்தினா் நெற்பயிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருவதால், நீா் நிலைகள் நிரம்பி வயலில் தண்ணீா் பாய்கிறது. இதனால், அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் எஸ்.பி. இளங்கோவன் தலைமையில், விவசாயிகள் நீரில் மூழ்கிய நெற்பயிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

அங்கு, ஆட்சியரிடம் அளித்த மனுவில், மதுரை மாவட்டம் வடக்கு, கிழக்கு, மேலூா் வட்டம், செல்லம்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் தொடா் மழையால் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. இதனால், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏக்கா் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனா். எனவே, மதுரை மாவட்டம் முழுவதும் தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

இதில், மாவட்ட நிா்வாகிகள் கே. முருகேசன், து. ராமமூா்த்தி, நாகேந்திரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com