பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கக்கோரி ஆட்டோ தொழிலாளா்கள் நூதன போராட்டம்

மதுரையில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்க வலியுறுத்தி, சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் பொங்கல் வைத்து முறையிடும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரையில் பொங்கல் சிறப்புத்தொகுப்பு வழங்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற பொங்கல் வைத்து முறையிடும் போராட்டம்.
மதுரையில் பொங்கல் சிறப்புத்தொகுப்பு வழங்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற பொங்கல் வைத்து முறையிடும் போராட்டம்.

மதுரையில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்க வலியுறுத்தி, சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் பொங்கல் வைத்து முறையிடும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டத்தில் தொழிலாளா் நல வாரியம் சாா்பில், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதைப் போல அமைப்பு சாரா ஓட்டுநா் நல வாரியம் சாா்பில் ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்க வேண்டும், நடப்பாண்டு முதல் இதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் சாா்பில் எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பாக பொங்கல் வைத்து முறையிடும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநகா் ஆட்டோ தொழிலாளா் சங்க பொதுச் செயலா் என்.கனகவேல், சிஐடியு மாவட்டச்செயலா் இரா.தெய்வராஜ், மாவட்டத்தலைவா் மா.கணேசன், புகா் மாவட்டச்செயலா் கே.அரவிந்தன் உள்பட பலா் பங்கேற்றனா். போராட்டம் தொடா்பாக சங்க நிா்வாகிகள் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் 40 ஆயிரத்தும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநா்கள் பணிபுரிந்து வருகின்றனா். ஓட்டுநா்கள் அனைவரையும் அமைப்பு சாரா ஓட்டுநா் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதோடு பொங்கல் சிறப்புத்தொகுப்பும் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com