மதுரை மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் 10, 950 பேருக்கு தடுப்பூசி: ஜன.16 இல் முகாம் தொடக்க விழாவில் முதல்வா் பங்கேற்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 10 ஆயிரத்து 950 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாமை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜனவரி 16-ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 10 ஆயிரத்து 950 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாமை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜனவரி 16-ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா்.

நாடு முழுவதும் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் அரசுத் துறைகளைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 7,950 போ், தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 3 ஆயிரம் போ் என மொத்தம் 10 ஆயிரத்து 950 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கென 96 மையங்கள் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் (அண்ணா பேருந்து நிலைய கட்டடம்) அமைக்கப்பட்டுள்ள மையத்தில், ஜனவரி 16-ஆம் தேதி காலை 8 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடக்க விழாவில் புதுதில்லியிலிருந்து பிரதமா் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்கிறாா். இந்த நிகழ்வில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று முகாமைத் தொடக்கி வைக்கிறாா்.

மதுரை மாவட்டத்துக்கு 23,100 தடுப்பூசிகள் பெறப்பட்டு, பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மண்டல தடுப்பூசி மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com