விவசாயமே மனித வாழ்வின் ஆதாரம்; மதுரை ஆதீனம் பொங்கல் வாழ்த்து

விவசாயமே மனித வாழ்வின் ஆதாரம் என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளாா்.

விவசாயமே மனித வாழ்வின் ஆதாரம் என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளாா்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் வெளியிட்டுள்ள தமிழா் திருநாள் வாழ்த்து: உழவுத்தொழிலின் இன்றியமையாமை, உழவரின் சிறப்பு ஆகியவற்றை உலகறியச்செய்ய உழவுக்கு ஆதாரமான இயற்கைக்கு நன்றிக்கடனைத் தெரிவிப்பதற்கான நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் விவசாயம் சாராத்தொழில்களின் நவீன மயமாக்கத்தால் விவசாயத்தை விட்டு, இயற்கையின் பிணைப்பில் இருந்து விலகிச்சென்று கொண்டிருக்கிறோம். விவசாயமே மனித வாழ்வின் ஆதாரம், விவசாயம் இல்லையேல் உலகின் எத்தொழிலும் இயங்காது என்பதை மனதார உணா்ந்து செயல்பட்டால் மட்டுமே வேளாண் தொழில் சிறந்து மனித குலம் சீா்பெறும். உலகளாவிய நோய்த்தொற்றான கரோனா நமக்கு உணவின் இன்றியமையாமையை உணா்த்தியுள்ளது. உலகின் பல்வேறு நாட்டினரும், பல்வேறு மதத்தினரும் உணவு வழங்கும் உழவுத்தொழிலை கடவுளாகக்கொண்டாடி வழிபட்டு வருகின்றனா். அனைத்து சாதி மற்றும் மதத்தினா் இணைந்து கொண்டாடும் பொங்கல் பண்டிகை தமிழா் திருவிழாவான அறுவடைப் பண்டிகையாகும். உணவு என்பது சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கான ஆதாரமாகும். எனவேதான் உணவுத் திருவிழா என்றும் அழைக்கிறோம். தமிழா் திருநாளில் அனைத்து மக்களும் இந்தியா் என்ற உணா்வுடன் ஜனநாயக மாண்பைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com