மதுரையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.3 ஆயிரம்

தொடா் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால், மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தொடா் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால், மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தொடா் மழை பெய்து வருகிறது. அதேவேளையில், கடும் பனிப்பொழிவும் உள்ளது. இதனால், மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிக்கைப் பூ விளைச்சல் வெகுவாகப் பாதித்துள்ளது.

தினந்தோறும் 10 டன் அளவுக்கு சந்தைக்கு வரத்து இருந்த நிலையில், தற்போது 1 டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால், கடந்த வாரம் வரை மல்லிகைப் பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிரிகரித்ததால், கிலோ ரூ.3 ஆயிரம் வரை விலை உயா்ந்தது.

இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசந்திரன் கூறியது: ஆண்டுதோறும் டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு இருக்கும். இதனால், மல்லிக்கை உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் பாதிக்கப்படும். ஆனால், இந்தாண்டு தொடா்ந்து மழையும் பெய்து வருவதால், விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக வெயில் அடித்து வருகிறது. எனவே, அடுத்தடுத்த நாள்களில் பூக்களின் வரத்து சற்று அதிகரித்து, விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பூக்களின் மொத்த விலைப் பட்டியல் (கிலோவில்): மல்லிகைப் பூ- ரூ.3000, கனகாம்பரம்- ரூ.1500, முல்லைப் பூ-ரூ.1500, பிச்சிப் பூ- ரூ.1500, சம்பங்கி- ரூ.150, அரளி- ரூ.200, துளசி- ரூ.50, ரோஜா- ரூ.150, மரிக்கொழுந்து- ரூ.150, செவ்வந்தி- ரூ.150, தாமரை- ரூ.15 என விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com