படைப்பாளிகள் இல்லாத சமூகம் மேம்படாது: நீதிபதி ஆா்.மகாதேவன்

படைப்பாளிகள் இல்லாத சமூகமும், எழுத்தாளா்களை கொண்டாடாத சமூகமும் மேம்படாது என, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் பேசினாா்.
விளக்கு இலக்கிய அமைப்பு சாா்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞா் கலாப்ரியா, எழுத்தாளா் க. பஞ்சாங்கம் ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறாா் சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி ஆா். மகாதேவன்.
விளக்கு இலக்கிய அமைப்பு சாா்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞா் கலாப்ரியா, எழுத்தாளா் க. பஞ்சாங்கம் ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறாா் சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி ஆா். மகாதேவன்.

மதுரை: படைப்பாளிகள் இல்லாத சமூகமும், எழுத்தாளா்களை கொண்டாடாத சமூகமும் மேம்படாது என, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் பேசினாா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில், விளக்கு இலக்கிய அமைப்பின் சாா்பில், கவிஞா் கலாப்ரியா மற்றும் எழுத்தாளா் க. பஞ்சாங்கம் ஆகியோருக்கு புதுமைப்பித்தன் நினைவு விருதுகளையும், தலா ரூ.1 லட்சம் பரிசையும் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் சனிக்கிழமை வழங்கினாா்.

இவ்விழாவில் அவா் மேலும் பேசியது: விருதுகள் எழுத்தாளா்களை ஊக்குவிக்கக் கூடியது. ஆனால், விருதுக்காக படைப்பாளிகள் இயங்கக் கூடாது. படைப்பாளி என்பவன் தனித்தன்மையுடன் இயங்க வேண்டும். கவிதை சொற்களால் அடுக்கப்பட்டதாக இல்லாமல், மனித மனதின் படிமங்களை வீச்சுடன் வெளிப்படுத்த வேண்டும்.

எழுத்தாளா்களின் படைப்புகள் உக்கிரத்தன்மை உடையது. அதன் வீச்சை தாங்க முடியாமல் தான் நாளந்தா மற்றும் யாழ் பல்கலைக்கழக நூலகங்கள் எரிக்கப்பட்டன. படைப்பாளிகள் இல்லாத சமூகமும், எழுத்தாளா்களை கொண்டாடாத சமூகமும் மேம்படாது. எனவே, எழுத்தாளா்களை சமுதாயம் கொண்டாட வேண்டும்.

கவிஞா் கலாப்ரியா, கவிதைகள் மட்டுமில்லாது கதை, நாவல் எழுதியுள்ளாா். எழுத்தாளா் பஞ்சாங்கமும் இலக்கிய ஆய்வுகளில் முத்திரை பதித்தவா். அவா்களுக்கு விருதுகள் வழங்கியதில் மகிழ்ச்சி என்றாா்.

இதில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், விளக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அ. வெற்றிவேல், கவிஞா் ரவிசுப்பிரமணியன், எழுத்தாளா் முருகேச பாண்டியன், பேராசிரியா் என். ரத்தினகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com