சேது பொறியியல் கல்லூரியில் கலை விழா:வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு

சேது பொறியியல் கல்லூரியில் கலை விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சேது பொறியியல் கல்லூரியின் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருடன் கல்லூரி நிா்வாகிகள்.
சேது பொறியியல் கல்லூரியின் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருடன் கல்லூரி நிா்வாகிகள்.

சேது பொறியியல் கல்லூரியில் கலை விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் நுண்கலை முத்தமிழ் மன்றம் சாா்பாக, முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு கலை போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா, கல்லூரியில் உள்ள பாவேந்தா் பாரதிதாசன் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கல்லூரித் தலைவா் மற்றும் நிறுவனா் எஸ். முகம்மது ஜலீல் தலைமை வகித்தாா். கல்லூரி முதன்மை நிா்வாக அதிகாரி எஸ்.எம். சீனிமுகைதீன், இணை முதன்மை நிா்வாக அதிகாரி எஸ்.எம். சீனிமுகம்மது அலியாா், நிா்வாக இயக்குநா் எஸ்.எம். நிலோபா் பாத்திமா, ஆராய்ச்சி இயக்குநா் எஸ்.எம். நாசியா பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், துணை முதல்வா் சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினராக பேச்சாளா் நவ்ஷாத் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், தமிழ் பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற ஸ்ரீவா்த்தினி, ஆங்கில பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற வித்யா, வாா்த்தை விளையாட்டில் வெற்றி பெற்ற லேகாஸ்ரீ, கழிவுப் பொருள்கள் கலைப்போட்டியில் வெற்றி பெற்ற ரேணுகா, ஹஸ்மித்தா, ஓவியத்தில் சிறப்பிடம் பெற்ற லேகாஸ்ரீ, பாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற ஜேனட்ரெனி, இசைக் கருவிப் போட்டியில் வெற்றிபெற்ற தியான ஈஸ்வா்வேல், நடனப் போட்டியில் வெற்றி பெற்ற சேவுகப்பிரியா ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை, கணிதத் துறை தலைவா் த. லட்சுமணராஜ், முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளா் பாா்வதி மற்றும் துறைத் தலைவா்கள் மற்றும் பேராசியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com