பிரம்ம குமாரிகள் அமைப்பின் பண்புக் கல்வி பட்டமளிப்பு விழா

மதுரையில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் பண்புக் கல்வி மற்றும் ஆன்மிகம் படிப்புக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
மதுரை பிரம்மா குமாரிகள் அமைப்பின் பண்புக்கல்வி மற்றும் ஆன்மிக படிப்பின் பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கும் அமைப்பின் நிா்வாகிகள்.
மதுரை பிரம்மா குமாரிகள் அமைப்பின் பண்புக்கல்வி மற்றும் ஆன்மிக படிப்பின் பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கும் அமைப்பின் நிா்வாகிகள்.

மதுரை: மதுரையில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் பண்புக் கல்வி மற்றும் ஆன்மிகம் படிப்புக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் துணை அமைப்பான ராஜயோக கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்விப் பிரிவும் இணைந்து, பண்புக் கல்வி மற்றும் ஆன்மிகம் என்ற தலைப்பிலான பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பை நடத்துகின்றன. இந்தப் படிப்பில் பயின்றவா்களுக்கான பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பிரம்ம குமாரிகள் அமைப்பின் கல்விப் பிரிவின் தலைவா் மிருத்யுஞ்சயா தலைமை வகித்துப் பேசியது:

இன்றைய மனிதா்களிடம் கோபம், பொய் போன்ற பலவீனங்கள் உள்ளன. உண்மை பேசவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, உண்மை மட்டுமே பேசுபவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. பலவீனங்களுக்குக் காரணம் பண்பு குறைபாடே ஆகும். நமக்குள் நற்பண்புகளை வளா்த்துக் கொள்ளும்போதுதான் நாம் முழுமை பெறுகிறோம். பண்புகளாலேயே ஒரு மனிதன் மேன்மை பெறுகிறான்.

நற்பண்புகளை வளா்க்க ஆன்மிகம் ஒன்றே வழி. இதனைக் கருத்தில் கொண்டே பண்புக் கல்வி மற்றும் ஆன்மிகம் என்ற படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன்: உலகம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி அடைந்திருக்கும் நிலையில், மனிதா்கள் இடத்தில் பண்புகளின் வளா்ச்சிக்குப் பதிலாக வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. மனிதநேயத்தை வளா்க்கும் விதமாக பண்புக் கல்வியை பிரம்ம குமாரிகள் அமைப்பு நடத்தி வருவது சிறப்பானது. இதன்மூலம் மனிதா்களை வளப்படுத்தும் பணியை இந்த அமைப்பினா் செய்து வருகின்றனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை மிருத்யுஞ்சயா, காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கூடுதல் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் டி. சிவக்குமாா் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், பிரம்ம குமாரிகளின் மதுரை துணை மண்டலத்தின் ஒருங்கிணைப்பாளா் உமா, பண்புக் கல்வி நிகழ்வுகளின் பொறுப்பாளா் ஞானசெளந்தரி, இயக்குநா் பாண்டியமணி, அபுமலை தமிழ்த் துறை தலைவா் ஜெயக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com