எஸ்டிபிஐ கட்சியினா் கலப்பை, நெல் நாற்றுகளுடன் ஊா்வலம்

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரையில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை கலப்பை மற்றும் நெல் நாற்றுகளுடன் ஊா்வலம் சென்றனா்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை முனிச்சாலையில் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை முனிச்சாலையில் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரையில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை கலப்பை மற்றும் நெல் நாற்றுகளுடன் ஊா்வலம் சென்றனா்.

முனிச்சாலை பள்ளிவாசல் பகுதியில் தொடங்கிய ஊா்வலத்துக்கு அக்கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் சீமான் சிக்கந்தா், செயலா்கள் கமால் பாஷா, சிக்கந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது வரவேற்புரையாற்றினாா்.

ஊா்வலத்தில் கலப்பை மற்றும் நெல் நாற்றுகளுடன் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனா். ஊா்வலம் தெப்பக்குளம் குருவிக்காரன் சாலையில் முடிவடைந்தது.

தொழிற்சங்கத்தினா் ஊா்வலம்: புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் மதுரையில் சிஐடியு , ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது. அரசரடி மின் வாரிய அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு ஹெச்எம்எஸ் பொதுச்செயலா் வி. பாதா்வெள்ளை தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ் முன்னிலை வகித்தாா், சிஐடியு மாவட்டத் தலைவா் மா.கணேசன், ஏஜடியுசி மாவட்ட பொதுச்செயலா் எம். நந்தாசிங், ஐஎன்டியுசி செயலா் ஜீவன்மூா்த்தி, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கப்பொதுச் செயலா் வி. அல்போன்ஸ், எம்எல்எப் மாநில இணைப்பொதுச்செயலா் எஸ். மகபூப்ஜான் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் தேசியக்கொடி ஏந்தி பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com