மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தொகுதி வாரியாக தோ்தல் அலுவலா்கள் விவரம்: மேலூா் - மேலூா் வருவாய் கோட்டாட்சியா், மதுரை கிழக்கு - மதுரை வருவாய் கோட்டாட்சியா், சோழவந்தான் (தனி) - மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், மதுரை வடக்கு - மாநகராட்சி உதவி ஆணையா் (மண்டலம் 2), மதுரை தெற்கு - மாநகராட்சி உதவி ஆணையா் (மண்டலம் 3), மதுரை மையம் - மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா், மதுரை மேற்கு - மதுரை கலால் துறை உதவி ஆணையா், திருப்பரங்குன்றம் - மதுரை மாவட்ட வழங்கல் அலுவலா், திருமங்கலம் - திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியா், உசிலம்பட்டி - உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா்.

உதவி தோ்தல் அலுவலா்கள் விவரம்: மேலூா் - மேலூா் வட்டாட்சியா், மேலூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா். மதுரை கிழக்கு - மதுரை வடக்கு மற்றும் மதுரை கிழக்கு வட்டாட்சியா்கள். சோழவந்தான் (தனி) - வாடிப்பட்டி வட்டாட்சியா், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா். மதுரை வடக்கு - மதுரை வடக்கு மற்றும் மதுரை கிழக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள். மதுரை தெற்கு - மதுரை தெற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மற்றும் மதுரை கூடுதல் கோட்ட கலால் அலுவலா். மதுரை மையம் - மேலூா் மற்றும் திருப்பரங்குன்றம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள். மதுரை மேற்கு - மேற்கு வட்டாட்சியா், மதுரை கோட்ட கலால் அலுவலா். திருப்பரங்குன்றம் - மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியா்கள். திருமங்கலம் - திருமங்கலம் வட்டாட்சியா், பேரையூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா். உசிலம்பட்டி - உசிலம்பட்டி மற்றும் பேரையூா் வட்டாட்சியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com