‘அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 13th July 2021 03:55 AM | Last Updated : 13th July 2021 03:55 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டம், மேலூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சு. லதா மீனாட்சி வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டம் மேலூா்- சிவகங்கை சாலையில் அம்பலக்காரன்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டில் 240 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நான்கு பட்டயப் படிப்புகளுக்கு முதலாமாண்டில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு தோ்ச்சிப்பெற்ற மாணவ, மாணவியா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ஸ்ரீா்ம் என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150 இணைய வங்கி, கடன் அட்டை, ஏடிஎம் அட்டை ஆகியவற்றின் மூலமாக இணையதளத்தில் செலுத்தலாம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பதிவுக் கட்டணம் கிடையாது. கல்லூரியில் உள்ள நான்கு பாடப் பிரிவுகளிலும் தலா 60 இடங்கள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.