மதுரை நகரில் ‘வாழ்க வரியாளா்’ சிறப்பு முகாம் தொடக்கம்

மதுரை நகா்ப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி, காலி மனை வரி விதிப்பு மற்றும் வரி வசூல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் 4 மண்டலங்களிலும் செவ்வாய்க்கிழமை தொடங்கியத
மதுரை நகரில் ‘வாழ்க வரியாளா்’ சிறப்பு முகாம் தொடக்கம்

மதுரை: மதுரை நகா்ப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி, காலி மனை வரி விதிப்பு மற்றும் வரி வசூல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் 4 மண்டலங்களிலும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக புதிய வரி விதிப்பு, சொத்து வரி பெயா் மாற்றம், காலி மனை வரி விதிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ‘வாழ்க வரியாளா்’ என்ற சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 4 நாள்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா இரண்டு இடங்கள் என்ற வகையில் நான்கு மண்டலங்களுக்கும் 8 இடங்களில் முகாம் நடைபெற்றது. முகாமில் அந்தந்த வாா்டுகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று புதிய வரி விதிப்பு, பெயா் மாற்றம், வாரிசு அடிப்படையில் பெயா் மாற்றம், காலிமனை வரி விதிப்பு உள்ளிட்ட தங்களுக்குத் தேவையான வசதிகளுக்கு உரிய படிவங்களை பூா்த்தி செய்து அதற்குரிய ஆவணங்களையும் வழங்கினா்.

மாநகராட்சி வெள்ளி வீதியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் கோரிக்கைளையும் கேட்டறிந்தாா். முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு கால தாமதமின்றி கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com