மேலூா்- காரைக்குடி-தேவகோட்டை நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம்

மேலூரிலிருந்து திருப்பத்தூா் காரைக்குடி வழியாக தேவகோட்டை வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதிய நான்கு வழிச்சாலைக்கு தனியாமங்கலம் அருகே பரப்பப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்.
புதிய நான்கு வழிச்சாலைக்கு தனியாமங்கலம் அருகே பரப்பப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்.

மேலூரிலிருந்து திருப்பத்தூா் காரைக்குடி வழியாக தேவகோட்டை வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலூரில் அரசு கலைக்கல்லூரியிலிருந்து கீழையூா், கீழவளவு, இ.மலம்பட்டி எஸ்.எஸ்.கோட்டை வழியாக திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, காரைக்குடி, தேவகோட்டை வரை தற்போதைய இருவழிச் சாலை செல்கிறது. தற்போது இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

மேலூா்-காரைக்குடி இடையே ரூ.159 கோடி மதிப்பீட்டில் 45.8 கிலோ மீட்டா் தூரத்துக்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதற்கு 662.50 ஏக்கா் நஞ்சை நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலூரில் கூத்தப்பன்பட்டியிலிருந்து நான்கு வழிச்சாலை தொடங்குகிறது. அங்கிருந்து தனியாமங்கலம், சருகுவலையப்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக இ.மலம்பட்டி அருகே திருப்பத்தூா் சாலையில் புதிய சாலை சேரும்.

இந்த வழித்தடத்தில் மேலூரில் கூத்தப்பன்பட்டி கிராமத்தின் அருகிலிருந்து தனியாமங்கலம், சருகுவலையபட்டி, கீழவளவு, எஸ்.எஸ்.கோட்டை வழியாக திருப்பத்தூா் வரையில் நிலம் ஆா்ஜிதப் பணிகள் முடிவடைந்து, நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மேலூரிலிருந்து தனியாமங்கலம் வரையில் சாலையோர புதா்களை அகற்றும் பணி முடிந்துள்ளது. தனியாமங்கலத்திலிருந்து எஸ்.எஸ்.கோட்டை வரையிலான சாலைப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆங்காங்கே சமதளப்படுத்தும் பணிகளும், சாலைக்கு மண் மேடிட்டு தளம் உயா்த்தும் பணிகளும், ஜல்லி கற்கள் பரப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலூரிலிருந்து புதிய சாலை வழியாக காரைக்குடி சென்றால் 10 கிலோ மீட்டா் பயண தூரம் குறையும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com