முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உசிலையில் முப்பெரும் விழா
By DIN | Published On : 19th July 2021 02:46 PM | Last Updated : 19th July 2021 02:46 PM | அ+அ அ- |

பி.கே.எம். இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளையின் முப்பெரும் விழா.
உசிலம்பட்டி பி.கே.எம். இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டட வளாகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு மின்சார குப்பை வண்டி வழங்கும் விழா மற்றும் இலவச கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, இலவச தட்டச்சு பயிற்சி படிக்கும் மாணவ மாணவிகள் துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ரவி நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் சுகாதார ஆய்வாளர் அகமது கபீர் பி. கே. எம். இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் புலவர் சின்னன் அய்யா செயலாளர் ஜெயராஜ் பொருளாளர் ராஜா துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் கிரீன்பார்க் பள்ளி முதல்வர் ராஜா கிளி ஸ்டார் ஹெல்த் மேலாளர் கர்ணன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மற்றும் பி.கே.எம் இளைஞர் மேம்பாட்டு கட்டளை ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் 58 கிராம கால்வாய் திட்ட சிவப்பிரகாசம் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு இலவச குப்பை வண்டி மற்றும் உசிலம்பட்டி சி.எஸ்.சி கணினி பயிற்சி மையத்தில் இலவசமாக கணினி பயிற்சி முடித்த 30 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், ஸ்ரீ ராஜாஜீ டைப்பிங் இன்ஸ்டியூட் 25 மாணவர்களுக்கு இலவச தட்டச்சு பயிற்சி வழங்குவதற்கு துவக்க விழாவும் நடைபெற்றது.