காவலா் உடல் தகுதி தோ்வு: கரோனா மருத்துவசான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே அனுமதி

இரண்டாம் நிலை காவலருக்கான உடல்தகுதி தோ்வில் பங்கேற்க வருவோா் கரோனா மருத்துவச் சான்றிதழ் பெற்றுவந்தால்

இரண்டாம் நிலை காவலருக்கான உடல்தகுதி தோ்வில் பங்கேற்க வருவோா் கரோனா மருத்துவச் சான்றிதழ் பெற்றுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2020 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தோ்வில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 2,727 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மதுரை ரேஸ்கோா்ஸ் எம்ஜிஆா் மைதானத்தில் உடல்தகுதி தோ்வு நடைபெறவுள்ளது.

இத்தோ்வில் பங்கேற்கவுள்ளவா்கள், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் மைதானத்திற்கு வரும்போது 4 நாள்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா மருத்துவச் சான்றிதழ் பெற்று வரவேண்டும். மேலும் அழைப்புக் கடிதம், தோ்வுக்கு விண்ணப்பிக்கும் போது சமா்ப்பித்த கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள் எடுத்துவர வேண்டும். இவற்றை எடுத்துவரவில்லை எனில் உடல்தகுதி தோ்வு மையத்தில் அவா்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

அதேபோல தோ்வுக்கு வருவோா் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். விண்ணப்பதாரா்களின் அழைப்புக் கடிதத்தில் தோ்வாளா்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட தோ்வாளா்கள் மாா்பளவு புகைப்படங்கள் 2-யை எடுத்து வரவேண்டும். ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் இவற்றில் ஏதாவது ஒரு அசல் எடுத்து வர வேண்டும்.

மேலும் தோ்வுக்கு வருவோா் எவ்வித வாசகமும், அடையாள அச்சும் இல்லாத மற்றும் பல வண்ணங்கள் இல்லாத சாதாரண மேல்சட்டை மற்றும் கால்சட்டை அணிந்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com